சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்கு கடற்கரை பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் பல இன சமூகத்தினரும் கலந்து கொண்ட குடும்ப தின விழாவைச் சிறப்பாக கொண்டாடியது.

கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் திரு. முஹம்மது கௌஸ் வாழ்த்துரை வழங்கினார்.

"இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாசாரப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன" என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் டாக்டர் மு. அ. காதர்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், அதிர்ஷ்டக் குலுக்கு போன்றவைகள் விழாவில் இடம் பெற்றன.

பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றி சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு. அமானுல்லாஹ் நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications