கீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கீழடியில் 5-ஆவது கட்ட அகழாய்வில் புதிதாக குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015- 2017-ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் 23 குழிகள் தோண்டப்பட்டு ஏற்கெனவே 4 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் தற்போது 5-ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

A water tank is found near Kizhadi

இந்த ஆராய்ச்சில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிக்காக விவசாயிகள் கருப்பையா, முருகேன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோரின் நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் முருகேசனின் நிலத்தில் உறைகிணற்றில் 7 உறைகள் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர்த்து முருகேசன் நிலத்தில் திண்ணை வடிவிலான திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஓரங்களில் பழைய மணல் பூச்சில் சுவர் போன்று அமைந்துள்ளது.

அது பார்ப்பதற்கு சிமெண்ட் கலவையால் ஆன சுவர் போன்று இருக்கிறது. முன்னதாக சுடுமண்ணால் ஆன பாசிமணிகள், இரும்பில் ஆன ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+