SIR: சீமான் சொன்னது போலயே நடந்துடுச்சே! இறந்தவர்கள் பட்டியலில் சிவகங்கை நாதக வேட்பாளர் சேர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜாவின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, இறந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றதால் அவர் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான 100 வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். அந்த வகையில் சிவகங்கை தொகுதியின் வேட்பாளராக இந்துஜா ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ntk sir tamil nadu

தற்போது தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்தமான எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வீடு வீடாக பிஎல்ஓ அதிகாரிகள் சென்று படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்ய வைத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

அதிலும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வரும் நிலையில் 6 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழகத்தில் எப்படி ஒரே மாதத்தில் அனைத்து வாக்காளர்களையும் சரி பார்த்துவிட முடியும் என்பதுதான் திமுக, கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்டவைகளின் கேள்வியாக இருக்கிறது.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. எனினும் எதிர்ப்பையும் மீறி இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலும் இந்த பணி நடந்தது. அப்போது இந்துஜாவும் அவரது கணவர் ரமேஷும் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனராம்.

இந்த நிலையில் அவர்கள் இருவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் விசாரித்த போது இருவரது பெயர்களும் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், அங்கு ஆட்சியர் பொற்கொடியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர் இந்த புகார் குறித்து ஆவணங்களாக சமர்ப்பித்தால் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என தெரிவித்தார்.

ஒருமுறை சீமான் பேட்டி கொடுத்தபோது , "நான் ஆலப்பாக்கத்தில் குடியிருந்தேன். அங்குதான் எனக்கு ஓட்டு உள்ளது. தற்போது நீலாங்கரை சென்றுவிட்டேன். இந்த பிஎல்ஓ அதிகாரிகள் ஆலப்பாக்கம் முகவரிக்குச் சென்று நான் இல்லாததால் என் பெயரை நீக்கிவிடுவார்கள். வேட்பாளர் பெயரும் இருக்காது" என்றார்.

எஸ்ஐஆரை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் அண்மையில் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்?

மக்களுக்கு இருக்கும் கடைசி உரிமையை இந்த நாடு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை பாருங்கள். திடீரென போலி வாக்காளர்களை கண்டுபிடித்தது போல பேசுவது ஏன், ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரி பார்க்க முடியும்.

ஓராண்டு கால அவகாசம் எடுத்து சிறப்பு தீவிர திருத்த பணிகளை செய்திருக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள வாக்காளர்கள் இதுவரை தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தார்கள். ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கிறார்கள். பெரிய பெரிய கட்சிகளில் அவர்களுக்கென்று கிளை இருக்கிறது. அவர்கள் போய் சரி செய்கிறார்கள். ஆனால் எங்களை போன்று வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆரை எப்படி எதிர்கொள்ள முடியும்? என் படம், விஜய் படம் இருப்பதை பார்த்தால் நீக்கிவிடுவார்களே! என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+