சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 2 வருஷத்தில் பாருங்கள்.. தமிழகத்தில் மிக முக்கிய மாற்றம் ஏற்படும்.. வேலூர் இப்ராஹிம் சூசகம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: இன்னும் இரு ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய மாற்றம் நடைபெறுகிறது என பாஜக தேசிய சிறுபான்மையின பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறுகையில் அனைத்து சமூக மக்களையும் மதங்களையும் சமத்துவமாக நேசிக்கக் கூடிய கட்சி பாஜக. இஸ்லாமியர்களை அரவணைத்துதான் இந்த தேசத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கையாக உள்ளது.

இந்து பெண்களே.. ஆ.ராசாவை தண்டிக்கனும்.. கலகம் தூண்டும் பாஜக வேலூர் இப்ராஹிம் இந்து பெண்களே.. ஆ.ராசாவை தண்டிக்கனும்.. கலகம் தூண்டும் பாஜக வேலூர் இப்ராஹிம்

கொள்கை

கொள்கை

இந்த கொள்கையை பாஜகவும் கொண்டிருக்கிறது. மத நல்லிணக்கத்திலும் தேச முன்னேற்றத்திலும் தேசிய நீரோட்டத்தில் இஸ்லாமியர்களையம் இணைத்து தான் செயல்பட வேண்டும். இதற்காகவே பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ரூ 5100 கோடியை சிறுபான்மையின மக்களின் கல்விக்காகவே ஒதுக்கியுள்ளார்.

இஸ்லாமிய வாக்கு வங்கி

இஸ்லாமிய வாக்கு வங்கி

இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாத வன்முறையாளர்களாகவும் மாற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா செய்து வருகிறது. இஸ்லாமியர்களை கல்வி கற்க விடாமல் இந்த அமைப்புகள் இடையூறு செய்கின்றன.

இந்து தலைவர்கள்

இந்து தலைவர்கள்

மேலும் இந்து தலைவர்கள் மீதும் இந்துத்துவா கொள்கைகளையும் சித்தாந்தங்ளையும் பேசுபவர்கள் மீதும் இந்த அமைப்புகள் குறி வைக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். இதை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகிறோம்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ சோதனைகளால் இஸ்லாமிய மக்களுக்கு எந்த வித பின்னடவும் கிடையாது. இஸ்லாமியர்கள் பாஜகவின் நோக்கத்தையும் கொள்கைகளையும் புரிந்து கொண்டு அவர்களாகவே இணைந்து வருகிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு காவல் துறை மூலம் எங்களை நெருங்குகிறது.

இந்துக்களின் நம்பிக்கை

இந்துக்களின் நம்பிக்கை

இந்துக்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்தக் கூடிய செந்தில் குமார் எம்பி, ஆ ராசா எம்பி போன்றோருக்கு திமுக அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. விரைவில் ஜனநாயக ரீதியாக அவர்களை திருப்பி அடிக்கக் கூடிய வேலையை பாஜக செய்யும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்திலும் தேசிய அளவிலும் பாஜக இடம் பிடிக்கும். வரும் தேர்தல் நாடாளுமன்றத்திற்கானது மட்டுமல்ல தமிழக சட்டசபைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்படும் என்றார் இப்ராஹிம்.

English summary
BJP Vellore Ibrahim says that in 2024, Tamilnadu will face Assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X