நள்ளிரவில் அலறிய கணவன்.. ஓங்கி ஓங்கி அடித்து.. செல்லம்மாவின் கோபத்தால் ஷாக்கான சிவகங்கை
சிவகங்கை: நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வம்பிழுத்த கணவனை உருட்டைக்கட்டையால் ஓங்கி ஓங்கி அடித்தே கொன்ற மனைவியை சிவகங்கை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வந்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாறாக ஒருவருக்கு ஒருவர் ஈகோவில் பிரச்சனையை முடிக்காமல் வளர்த்துக்கொண்டே சென்றால் குடும்பம் பிரிந்துவிடும். சில நேரங்களில் குடும்பங்களில் விபரீதம் கூட நிகழ்ந்துவிடும். இதன் காரணமாக 40 வயதை கடந்தவர்களின் திருமண வாழ்வில் சில கசப்பான சம்பவங்கள் நடந்துவிடுகிறது, அப்படி ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புணரியில் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரபட்டியை சேர்ந்த நரியழகனுக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி செல்லம்மாள்(45). இவர்களுக்கு 4 மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2 பேருக்கு கல்யாணமாகிவிட்டது.
திருமணமாகாத மீதமுள்ள இரு மகள்களில் ஒருவர் காரைக்குடியில் நர்சாக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் பெற்றோருடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். நரியழகனுக்கு மது குடிக்கம் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்லம்மாள் கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவும் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்லம்மாள், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்து போன நரியழகன் சுருண்டு விழுந்து இறந்தார். கணவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த செல்லம்மாள், வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார். நரியழகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு சடலமாக இருந்த நரியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துவதுடன், அவரை அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவான அவரது மனைவி செல்லம்மாளை வலைவீசி தேடி வருகிறார்கள்.நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதம் செய்த கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்து மனைவியே கொன்ற சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications