11 வயது ஸ்ரீசரண்.. பறிபோன கண்.. முடங்கிய கை, கால்கள்.. நிதியுதவி செய்து வாழ்வு அளியுங்களேன்
சென்னை: சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சுசீலா தம்பதியினரின் மகன் ஸ்ரீசரண் (11) வயது. சரவணன் மதுபானக் கடை பாரில் வேலை செய்யும் ஊழியர். எல்லோரையும் போல ஆடி ஓடித் திரிந்த ஸ்ரீசரணுக்கு பார்வை மங்களாக தெரியத் தொடங்கியது.
உள்ளூரிலே மருத்துவமனை சென்று சிகிச்சை செய்து பார்த்ததில் கண்ணில் எந்தப் பிரச்சினையுமில்லை நரம்பில் பிரச்சினையுள்ளது என பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
வெறும் (6000) ஆறாயிரம் சம்பளம் பெறும் சரவணனுக்கு பேரிடியாக இருந்தது இருந்தும் தன் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென பெங்களூருவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். பல டெஸ்ட் செய்து சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் (Adrelo leuko dystrophy) எனும் நரம்பு பிரச்சினையுள்ளது என சி.எம்.சி மருத்துவமனை வேலூருக்கு பரிந்துரைத்தனர்.
தன் பிள்ளையைக் காப்பாற்ற ஒவ்வொரு இடமாக தூக்கி அலைந்த சரவணன் வேலூரிலும் வந்து மருத்துவம் பார்க்கதொடங்கினர். இரண்டு மாதங்கள் சிகிச்சை தொடர்ந்தது துரதிர்ஷ்டமாக குழந்தை சரணுக்கு இரண்டு கண்ணும் பார்வை பறிபோனது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வயதும் கூடிப் போக செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
நாளடைவில் பார்வை பறிபோன சிறுவனுக்கு ஒரு பக்க கையும்,காலும் செயலிழக்க குடும்பம் சோகத்தில் மூழ்கிப் போனது . மிகவும் மோசமான சூழலில் உள்ள பையனைக் காப்பாற்ற சி.எம்.சி மருத்துவமனை தன்வந்திரி வைத்தியசாலை நாமக்கல்லிற்கு பரிந்துரைக்க தற்பொழுது நாமக்கல்லிலுள்ள உறவினர் வீட்டில் வைத்து பிசியோதெரபி செய்து வைத்தியம் பார்த்து வருகிறார் சரவணன்.
தன் பிள்ளையை பழையபடி நடந்து ஆடி ஓட வைக்க வேண்டுமென முயற்சியில் இருந்த சரவணனுக்கு தன் பிள்ளையின் ஒருபக்க கை காலும், கண்ணும், வாய் பேச முடியாமையும் கண்டு நிற்கதியாய் இருக்கிறார். தன்வந்திரி வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்கள் லோரன்ஸோ எண்ணெய் வாங்கி தேய்த்து வந்தால் குணமடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 500 மிலி. 25000 ரூ மாதம் மூன்று முறை தேய்க்க சுமார் 85000 ரூ தேவைப்படுகிறது.
தினக் கூலியான சரவணனுக்கு இது எப்படி சாத்தியமாகும். "மாதம் 85000 ரூபாய்க்கு என்ன பண்றதுனே தெரியலைங்க சார். இவ்வளவு பணம் புரட்டி என் பிள்ளைய காப்பத்திடுவேனானு ஒவ்வொரு டிரஸ்டா உதவி கேட்டுட்டே இருக்கேன் சார்.. இருங்க வாட்டர் பாக்கெட் கேட்கிறாங்க" என, சொல்வதறியாது போனை வைத்தார் சரவணன்.
ஸ்ரீசரணுக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீசரண் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் ஸ்ரீசரண் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். இந்த லிங்கில் இருக்கும் பக்கத்தை திறந்து அதில் donate என்பதை கிளிக் செய்து பணம் செலுத்த முடியும். இந்த பக்கத்திலேயே ஸ்ரீசரண் சிகிச்சை பெற்றதற்கான விவரங்கள் இடம் பெற்று இருக்கும். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்

















Click it and Unblock the Notifications