ஒரே ஒரு சின்னப் புன்னகை.. அது போதுமே.. அன்பு சூழ் உலகுக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகில் இப்போது துவேஷம் நிறைந்து வழிகிறது. அன்புக்கு பெரும் பஞ்சம் வந்து விட்டது. அன்பாக நாலு வார்த்தை பேசும் மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது.. இப்படிப்பட்ட உலகில் நாம் அன்பு சூழ் வாழ ஒரு சின்ன புன்னகை கூட போதும்.. கூட இருப்பவர்களையும் நாம் நம் அன்பால் வசப்படுத்தலாம்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது போல அன்பு ஒன்றே உறவுகதை இணைக்கும். நீங்கள் உங்கள் நெருங்கியவர்களிடம் தினமும் பேசுங்கள் அல்லது தினம் ஒரு புன்னகையாவது செய்யுங்கள். அந்த சிறு புன்னகை அவர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்.

Smile is the only weapon for anyone who wants to win the world.

முகத்தில் தோன்றும் சிறு புன்னகை உங்கள் எதிரிலிருப்பவர்களையும் புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் வைத்துக் கொள்ளும். காலையில் எழுந்திருக்கும் போதே நேற்று நடந்ததை மறந்து மனதில் மகிழ்ச்சியோடு எழுந்திருங்கள். உங்கள் துணையுடன் சேர்ந்து புன்னகையுடன் ஒரு காபி அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது ஒரு புன்னகை உங்கள் குழந்தைகள் நண்பர்கள் பெற்றவர்கள் அனைவருக்கும் உங்கள் புன்னகையைப் பரிசளியுங்கள். புன்னகை என்பது ஒரு பொன் நகையல்லவா. அது மற்றவர்களுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

உதட்டோரம் வரும் சிறு புன்னகை கூட நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். எவ்வளவு கடினமான நேரங்களிலும் உங்கள் புன்னகையை மறந்துவிடாதீர்கள். சிலர் நம்மை வேண்டுமென்றே வம்பிழுக்கும் போது ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டுச் செல்லுங்கள். அந்த புன்னகையே அவர்கள் பேசுவதை நிறுத்திவிடும்.

இந்த பரபரப்பான உலகில் ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் இறுதிக் காலத்தில் எல்லோரும் எதிர்பார்ப்பது சிறிது அன்பு மட்டும் தான். அந்த அன்பை வெளிப்படுத்த ஒரு சிறு புன்னகை போதுமே. ஒரு சிறு குழந்தையின் புன்னகையைப் பார்க்கும் பார்க்கும் போது நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் மறந்துவிடும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். அது போல பிள்ளையின் புன்னகையில் பெற்றவர்கள் தங்கள் துன்பத்தை மறந்து மகிழ்ச்சி அடைவார்கள். அந்த புன்னகை செய்யும் மாயமே தனி தான். நமக்கு எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி தருவது நம்முடைய புன்னகை தான். உங்களுடைய புன்னகை தான் உங்களுக்குஉற்சாகத்தைத் தருகிறது.

இறைவன் கொடுத்த பிறவி இது. இப்பிறவியில் நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம் புன்னகையால் நம் சுற்றத்தாரையும் மகிழ்ச்சிப் படுத்தலாமே. வாழ்க்கையில் புன்னகை மிகவும் அவசியம். வயதான பெற்றோர்களிடம் நீங்கள் நேரமின்மையால் பேசாவிட்டாலும் ஒரு புன்னகை மட்டும் இருந்தால் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

எனவே என்றென்றும் புன்னகையால் உங்கள் வாழ்வு மலரட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+