டோணியின் மெத்தனத்தால் வந்த வினை.. பெனால்டியாக வங்கதேசத்திற்கு போன 5 ரன் ! கோஹ்லி கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரிமிங்காம்: இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் டாசில் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

இந்த போட்டியில் வங்கதேசம் பேட் செய்தபோது டோணியால் வீணாக 5 ரன்கள் போனது. பவுண்டரி எல்லையில் இருந்து ஃபீல்டர் வீசிய பந்தை வாங்கி ஸ்டெம்பை நோக்கி தள்ளிவிட்டார் டோணி. ஆனால், ஸ்டம்புக்கு பின்னால் போட்டிருந்த டோணியின் கீப்பர் க்ளவுஸ் மீது பந்து பட்டு ஓடியது.

Bangladesh get five penalty runs sue to the Dhoni

கிரிக்கெட் விதிமுறைப்படி, மைதானத்தில் வேறு ஏதேனும் பொருள் மீது பந்து பட்டால், அதாவது மைதானத்தில் வைக்கப்படும், ஹெல்மெட், கழற்றிவிடப்படும் ஷூ, க்ளவுஸ் போன்ற பொருட்கள் மீது பந்து பட்டால் ஃபீல்டிங் செய்யும் அணிக்கு அபாரதமாக, பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் சும்மா கொடுக்கப்படும். இதேபோல இன்றைய போட்டியிலும், நடுவர் இதை கவனித்து வங்கதேசத்திற்கு கூடுதலாக 5 ரன்களை கொடுத்தார். இதைப் பார்த்த கோஹ்லி ஆத்திரமடைந்தார்.

டோணி வழக்கமாக இதுபோல பின்பக்கமாக பந்தை ஸ்டெம்புக்கு எறிந்து பேட்ஸ்மேன்களை ரன்அவுட் செய்வதில் வல்லவர். ஆனால் இன்று அவரது கையுரையே அவருக்கு எதிராக திருமம்பிவிட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dhoni attempting a run-out, throws the ball onto his gloves and Bangladesh get five penalty runs.
Please Wait while comments are loading...