இளம் வீரர்களை வாங்கி குவித்த சிஎஸ்கே.. தோனிக்கு இஷ்டம் இல்லையா! காசி விஸ்வநாதனிடம் இதை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கூட ஹெட்போன்ஸ் போடாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. 19 ஆண்டு கால ஐபிஎல் ஏல வரலாற்றில் சிஎஸ்கே நிர்வாகிகள் ஹெட்போன் போடாமல் ஏலத்தில் பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிகளவில் இளம் வீரர்களை வாங்கி குவித்துள்ளது. டாடிஸ் ஆர்மி என்று சொல்லப்பட்ட சிஎஸ்கே அணி, இப்போது பேபிஸ் ஆர்மி என்று சொல்லப்படும் அளவிற்கு மாறி இருக்கிறது. அந்த இளம் பட்டாளத்தில் தோனி மட்டுமே சீனியர் வீரராக காணப்படுகிறார்.

CSK

இளம் வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரை சிஎஸ்கே அணி ரூ.14.20 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதேபோல் ராகுல் சஹரை ரூ.5.20 கோடிக்கும், சர்ஃபராஸ் கானை ரூ.75 லட்சத்திற்கும் சிஎஸ்கே வாங்கியுள்ளது. அதேபோல் மேட் ஹென்ரி ரூ.2 கோடிக்கும், அமன் கான் ரூ.40 லட்சத்திற்கும், ஷார்ட் ரூ.1.50 லட்சத்திற்கும் வாங்கியுள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அகில் ஹொசைனை ரூ.2 கோடிக்கே சிஎஸ்கே அணி தட்டித் தூக்கியது. 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் சிஎஸ்கே அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கூட்டணி என்றே பயணித்து வந்தது. ஆனால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே அதிகமாக வாங்கி சூடுபட்டுக் கொண்டது.

இதில் இருந்து வெளியில் வரும் வகையில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கி குவித்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக ஆடவுள்ள ஏராளமான வீரர்கள் 25 வயதுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முடிவில் தோனிக்கு விருப்பம் இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால் 2009 ஐபிஎல் மினி ஏலம் முதல் சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் தோனியின் விருப்பத்திற்கு ஏற்பவே வீரர்களை வாங்குவார்கள். தோனி ஏலத்தின் டேபிளிலில் இல்லையென்றாலும், நிர்வாகிகளுடன் செல்ஃபோனில் தொடர்பிலேயே இருப்பார். சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் எப்போதும் ஹெட்போனுடன் தான் காணப்படுவார்.

ஆனால் இம்முறை சிஎஸ்கே அணி நிர்வாகிகள் யாரும் ஹெட்போனை அணியவில்லை. சிஎஸ்கே உரிமையாளர் ரூபா ஸ்ரீனிவாசன் செல்ஃபோனில் மட்டும் சில மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருந்தார். இதனால் தோனியின் அறிவுறுத்தல்படி சிஎஸ்கே அணி முடிவுகளை எடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+