For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

19 வருடம் முன் இறந்த அப்பாவின் கிளவுசுடன் விளையாடிய கீப்பர்... டெஸ்ட் போட்டியில் நடந்த நெகிழ்ச்சி!

By Shyamsundar

அடிலெய்ட்: இங்கிலாந்து விக்கெட் கீப்பர் 'ஜானி பெயர்ஸ்டோ' 19 வருடம் முன் இறந்து போன தன் அப்பாவின் கிளவுசுடன் நேற்றைய போட்டியில் கீப்பிங் செய்து இருக்கிறார்.அடிலெய்ட்ல் நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

எப்போதும் போல இந்த வருடமும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலேயே வைரல் ஆக தொடங்கி இருக்கிறது. பல்வேறு வைரல் பிரச்சனைகளுக்கு இடையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்து இருக்கிறது.

முக்கியமாக இங்கிலாந்து கீப்பருக்கு அந்த கிளவுஸ் கிடைத்த சம்பவமும் வைரல் ஆகி இருக்கிறது. 19 வருடங்களுக்கு பின் எதிர்பார்க்காத நாளில் அவருக்கு இந்த கிளவுஸ் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து விக்கெட் கீப்பர்

இங்கிலாந்து விக்கெட் கீப்பர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் 'டேவிட் பெயர்ஸ்டோ' 19 வருடங்களுக்கு முன்பு திடீர் என்று ஒருநாள் மரணம் அடைந்தார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பரான இவரின் மரணம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் 'ஜானி பெயர்ஸ்டோ' அவரைப்போலவே விக்கெட் கீப்பராக இங்கிலாந்து அணியில் சேர்ந்தார்.

கிளவுஸ் பரிசு

கிளவுஸ் பரிசு

இந்த நிலையில் டேவிட் உயிருடன் இருந்த போது முக்கியமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. ஆண்ட்ரு ஜான்ஸ் என்ற இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் சிறிய வயதில் டேவிட்டை எதோ ஒரு கடையில் வைத்து பார்த்து இருக்கிறார். அப்போது டேவிட், ஆண்ட்ருவிற்கு கிளவுஸ் கிஃப்டாக அளித்து இருக்கிறார். மேலும் அதில் தன்னுடைய கையெழுத்தும் போட்டுள்ளார்.

19 வருடங்களுக்கு பின்

19 வருடங்களுக்கு பின்

அதன்பின் ஆண்ட்ரு அந்த கிளவுஸை அப்படியே மறந்துவிட்டார். தற்போது 19 வருடங்களுக்கு அதை வீட்டில் இருந்த பழைய பெட்டியில் இருந்து எடுத்துள்ளார். இந்த நிலையில் ஆஷஸ் போட்டியில் கீப்பிங் செய்து வரும் டேவிட்டின் மகனான ஜானியிடம் அதை பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளார். மேலும் அவரிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் சந்திக்க மட்டும் அனுமதி வாங்கி இருக்கிறார்.

பழைய கிளவுஸ்

பழைய கிளவுஸ்

நேற்று காலை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது அவர் அந்த கிளவுஸை ஜானியிடம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜானி அதே இடத்தில் அழுது இருக்கிறார். நேற்று அவர் அந்த கிளவுசுடன் களத்தில் விளையாடினார். மேலும் இந்த சம்பவம் தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 5, 2017, 12:51 [IST]
Other articles published on Dec 5, 2017
English summary
Australian is currently playing Ashes test series against England. England wicket keeper uses his father's keeping gloves after 39 years as the gift.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X