ஏல தொகை அப்படியே வராது! பண்ட், கோலிக்கு உண்மையில் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் தெரியுமா? புதுசா இருக்கே
டெல்லி: ஐபிஎல் அணி ஏலம் கடந்த ஞாயிறு, திங்கள் நடந்த நிலையில், அதில் பல்வேறு வீரர்களும் கோடி கணக்கில் ஏலம் போனார்கள். குறிப்பாக ரிஷப் பண்ட் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.27 கோடிக்கு ஏலம் போனார். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனாலும் அவருக்கு அந்த தொகை அப்படியே ஊதியமாகக் கிடைக்காது. பிடித்தம் போகவே கிடைக்கும். அப்படி பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் உள்ளிட்டோருக்கு பிடித்தம் போக எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. அதில் சுமார் 570க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அவர்களை ஐபிஎல் அணிகள் போட்டிப் போட்டுக் கொண்டு எடுத்தது.

ரிஷப் பண்ட்: அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் ரூ. 26 கோடிக்கும் ஏலம் போனார். என்ன தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனாலும் இவர்களுக்கு இதே தொகை ஊதியமாக வராது. பிடித்தம் போகவே வரும். அப்படி ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு எவ்வளவு ஊதியம் வரும் என்பதை நாம் பார்க்கலாம். ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்குப் போன ரிஷப் பண்ட்டை வைத்து நாம் முதலில் கணக்கிடுவோம். பிறகு மற்ற வீரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
முதல் நாள் ஏலத்தில் பண்ட்டை ஏலத்தில் எடுக்க லக்னோ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய அணிகள் மிகக் கடுமையாக முயன்றன. பெங்களூர் அணி முதலிலேயே ஒதுங்கிவிட்ட நிலையில், லக்னோ மற்றும் ஹைதராபாத் இடையே கடும் போட்டி இருந்தது. ஹைதராபாத் ரு.20.50 கோடியுன் நின்றுவிட்டது. ரூ. 20.75 கோடிக்கு பண்ட்டை வாங்கிவிடலாம் என லக்னோ நினைத்த போது, ஆர்டிஎம் உடன் வந்தது டெல்லி அணி.
எவ்வளவு: ரூ. 20.75 கோடிக்கு இருந்த பண்ட்டின் விலையை ரூ. 27 கோடிக்கு ஏற்றிவிட்டார்கள். லக்னோவுக்கு பண்ட் கண்டிப்பாகத் தேவை என்பதால் ரூ. 27 கோடி கொடுத்து வாங்கினார்கள். சரி, விஷயத்திற்கு வருவோம் ஏலத்தில் விற்கப்படும் வீரருக்கு அதே தொகை கிடைக்குமா.. இல்லை பிடித்தம் இருக்குமா.. அப்படியே பிடித்தம் இருந்தால் அதுபோக எவ்வளவு கிடைக்கும் பலருக்கும் உள்ள கேள்வியாக இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் போன நிலையில், அதில் வருமான வரியாக 8.1 கோடி ரூபாய் கழிக்கப்படும். அதுபோக ரூ. 18.9 கோடி மட்டுமே அவருக்கு வழங்கப்படும். வருமான வரி சட்டத்தில் மாற்றம் வரவில்லை என்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் பண்ட்டிற்கு இதே தொகை தான் ஊதியமாக வழங்கப்படும். பண்டிற்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், அவருக்கு வருமான வரி போக ரூ.18.72 கோடி ஊதியமாகக் கிடைக்கும்.
மற்ற வீரர்கள்: நம்ம அஷ்வின் ரூ. 9.75 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்த நிலையில், அவருக்கு வரி போக சுமார் ரூ. 6.8 கோடி ஊதியமாகக் கிடைக்கலாம். அதேபோல மும்பை அணியின் ரோஹித் ஷர்மா ரூ. 16.30 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வரி போக சுமார் ரூ. 11.41 கோடி ஊதியமாகக் கிடைக்கும். கோலிக்கு ரூ. 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ரூ. 14.7 கோடி கிடைக்கும்.
அதேநேரம் வருமான வரியில் கூடுதலாக சர்சார்ஜ் வரும் என்பதால் இதை விட ஓரிரு கோடி குறைவாகக் கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம். அதேபோல பிளேயிங் 11இல் இடம்பெறும் வீரர்களுக்கு தனியாக போட்டி கட்டணமாக ரூ. 7.5 லட்சம் வழங்கப்படும். எனவே, எவ்வளவு போட்டியில் விளையாடுகிறார்களோ.. அதை பொறுத்தும் இது மாறும்.
ஐபிஎல் தொடரின் போது ஒரு வீரர் காயம் அடைந்தால், அவருக்கு ஊதியம் முழுமையாக வழங்கப்படும். அதேநேரம் போட்டிக்கு முன் காயம் ஏற்பட்டால் அது வேறு விதம். அதாவது வெளிநாட்டு வீரர் ஒருவர் ஐபிஎல் தொடருக்கு முன்பு காயம் ஏற்பட்டால் அவருக்கு இழப்பீடு கிடைக்காது.. அதேநேரம் இந்திய வீரர் ஒருவர் இந்தியாவுக்காக விளையாடும் போது காயம் ஏற்பட்டு, அதனால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால், அந்த சீசனுக்கான முழு தொகை பிசிசிஐ இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications