பெயிண்டை கூட விடாமல்.. எல்லாத்தையும் செக் பண்ணுங்க.. பைனலுக்கு முன்.. ஆஸ்திரேலியாவிற்கு போன வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை பைனல்ஸ் ஆட உள்ள நிலையில்.. ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை பைனல்ஸ் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. 2011ல் இரண்டு அணிகளும் செமி பைனலில் மோதிக்கொண்டன. 2003ல் இரண்டு அணிகளும் பைனலில் மோதிக்கொண்டன.

 Huge warning to Australia ahead of its 2023 World Cup Finals against India

இந்த நிலையில் மீண்டும் இரண்டு அணிகளும் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில்.. அதுவும் பைனல்ஸ் ஆட்டத்தில் மோத உள்ளன. 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதின. அதில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் ஒரு அணி பைனலுக்கு வந்தது. அது ஆஸ்திரேலியா அணி. இன்னொரு பக்கம் இந்தியாவை பைனலில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

அதேபோல் 2023ல் இந்தியா ஒரு போட்டியில் தோல்வி அடையாமல் ஒரு அணி பைனலுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் பைனலில் யார் வெற்றிபெறுவார்கள்.. அன்று கங்குலி சிந்திய கண்ணீருக்கு ரோஹித் இன்று பதிலடி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாண்டிங்: வலுவான பாண்டிங் டீமிடம் இந்தியா மோசமாக ஆடி மண்டியிட்டது. கங்குலியின் தவறான முடிவுகள், கேப்டன்சி சொதப்பல் , பேட்டிங் சொதப்பல் காரணமாக இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்தியாவின் அந்த மோசமான ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்க இந்தியா தற்போது களமிறங்கி உள்ளது.

எச்சரிக்கை: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை பைனல்ஸ் ஆட உள்ள நிலையில்.. ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது. அதன்படி ஐஸ்லேண்ட் கிரிக்கெட் வாரியம் செய்துள்ள போஸ்டில்,

ஆஸி.க்கு ஒரு மெசேஜ்: இறுதிப் போட்டிக்கு முன் அனைத்தையும் சரிபார்க்கவும். டாஸ் போடும் காயினில் இருக்கும் உலோகம் மற்றும் அதன் அடையாளங்கள், பிட்சில் உருட்டப்படும் உருளையின் எடை, டிரஸ்ஸிங் ரூமின் பெயிண்டில் உள்ள நச்சுகள், சந்திரன் மற்றும் சூரியனின் இடங்கள் எப்படி இருக்கின்றன போன்றவை பற்றி ஆலோசியுங்கள். நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர கூடாது. அதனால் அனைத்தையும் சோதனை செய்யுங்கள் என்று கிண்டலாக கூறப்பட்டு உள்ளது.

என்ன காரணம்?; செமி பைனலில் இந்தியா வென்றதற்கு பின் பல தியரிக்கல் கூறப்பட்டன. பிட்ச் மாற்றப்பட்டுவிட்டது. புதிய பிட்ச் ஆடுவதற்கு பதில் பழைய பிட்ச் வைத்து ஆடினார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்திற்கு முன் கசிந்த மெயில் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசியில் இண்டிபெண்டண்ட் பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் உள்ளார். அவர்தான் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை பிட்ச் நம்பர் 6ஐ சோதனை செய்துள்ளார். அவர் ஐசிசிக்கு அனுப்பிய கோபமான மெயில்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

 Huge warning to Australia ahead of its 2023 World Cup Finals against India

அவருடைய மெயிலில்தான் பிசிசிஐ மீண்டும் பழைய பிட்ச் பயன்படுத்துகிறது என்று புகார் வைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இன்று நடக்கும் ஆட்டம் , ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச்சில் விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்தான் ஐசிசியிடம் புகார் வைத்துள்ளார்.

இந்தியா தனது வெற்றிக்கு உதவி செய்யும் வகையில் பிட்சை மாற்றை உள்ளது என்று விமர்சனம் வைக்கப்பட்டது. இது ஸ்பின் பிட்ச். ஸ்லோ பிட்ச் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அதை எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் விதமாக இரண்டு அணிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 750 ரன்களை இந்த பிட்சில் அடித்தன. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா அணியும் அதேபோல் புகார்களை வைக்க கூடாது என்பதற்காக ஐஸ்லேண்ட் அணி விமர்சனம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+