"என்ன செய்றது மை சன்" நாட்டாமை செந்திலாக மாறிய ரோஹித் சர்மா.. ஹிட்மேனை பொளக்கும் தெறி மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, ஹிருதாய்-ன் அபார சதம் காரணமாக 228 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. இதனையொட்டி சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.

நாட்டாமை படத்தில் கவுண்டமணி பெண் பார்க்க சென்ற போது அவரின் தந்தையாக வரும் செந்தில், "என்ன பண்றது மை சன்.. நம்ம ஒன்னு நினைச்சா.. தெய்வம் ஒன்னு நினைக்கிது" என்று சொல்வார். இதில் வரும் கவுண்டமணியை அக்சர் படேலாகவும், செந்திலை ரோஹித் சர்மாவாக மாற்றி, "என்ன பண்றது தம்பி.. நாம ஒன்னு நினைச்சா.. தெய்வம் வேறு ஒன்னு நினைக்கிது" என்று ஹாட்ரிக் விக்கெட்டுக்கான கேட்சை விட்டுவிட்டு சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

Champions Trophy 2025 India vs Bangladesh Memes 2025 vs

நாட்டாமை படத்தில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் தனது அல்லக்கையை கால்களை தூக்கி அடிக்கும் காட்சி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய டெம்ப்ளேட். இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது, ஜேக்கர் அலி கொடுத்த கேட்சை ரோஹித் சர்மா தவறவிட்டார். இதனை பயன்படுத்தி ஜேக்கர் அலி - ஹிருதாய் இருவரும் 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் நாட்டாமை படத்தின் அல்லக்கையாக ரோஹித் சர்மாவையும், பொன்னம்பலமாக ரசிகர்களையும் மாற்றி அடிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் எனக்கு வெறி அடங்கலடா ரகம்.

Champions Trophy 2025 India vs Bangladesh Memes 2025 vs

வேலாயுதம் படத்தில் திருடனாக நடித்த சந்தானம், இறுதியாக விஜய் வீட்டில் இருந்து பணப்பையை எடுத்து கொண்டு ஓடுகளை பிரித்து வெளியில் வருவார். இதனை செல்ஃபோனில் ஊர் முழுக்க சூரி சொல்வார். ஜேக்கர் அலி - ஹிருதாய் பார்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் திணறிய போது, ஒரு வழியாக ஜேக்கர் அலி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பார். இடையில் 2 கேட்ச்கள் கோட்டைவிட்டிருப்பார்கள். இதனை வேலாயுதம் படத்துடன் ஒப்பிட்டு சந்தானமாக விராட் கோலியையும், சூரியாக முகமது ஷமியையும் மாற்றி, ஒரு வழியாக இந்திய ஃபீல்டர் கேட்ச் பிடிச்சிட்டாங்கயா என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல் ரகம்.

Champions Trophy 2025 India vs Bangladesh Memes 2025 vs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+