பிடிவாதம்.. மனதில் இருப்பதை கூட அவரால் பேச முடியல.. ருத்துராஜை.. விட்டு விளாசிய மாஜி வீரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மீது கடுமையான விமர்சனங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வைத்துள்ளார்.

நேற்று மேட்சில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சொதப்பிய போதும் கூட கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் நம்பிக்கையோடு விடாமல் ஆடினார். 44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 63 ரன்கள் எடுத்தார். தேவையான நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை சரிவில் இருந்து மீட்டார்.

அவர் அவுட் ஆன பின் தோனி - ஜடேஜா நிதானமாக ஆடினர். கடைசி 4 ஓவர்களில் இதனால் தோனி நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றார்.

அதிலும் 19வது துஷார் தேஷ்பாண்டே ஓவரில் தோனி அடித்த சிக்ஸ், அதன்பின் அதே ஓவரில் கடைசி பந்தில் ஜடேஜா அடித்த சிக்ஸ் காரணமாக சிஎஸ்கே அணிக்கு வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. கடைசி ஓவரில் சந்தீப் சர்மா ஓவர் போட்டார். அவர் இதற்கு 19 ஓவர்களை சென்னை சேப்பாக்கத்தில் தோனியை வைத்துக்கொண்டு டிபன்ட் செய்துள்ளார். அதன்படியே நேற்றும் தோனி விக்கெட்டை எடுத்தார்.

IPL 2025 Former player Manoj Tiwari s massive statement against Ruturaj Gaikwad after CSK loss against RR

நேற்று விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவரும் சொதப்பினார் மற்ற வீரர்கள் இன்றும் சொதப்பினார்கள். திரிபாதி 23 ரன்களுக்கு அவுட் ஆனார். 10 பந்துகள் பிடித்த துபே 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். திரிபாதி, துபே இரண்டு பேருமே பார்மில் இல்லை. கடைசி 3 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில்.. ஒவர்டன் 4வது பந்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் 5வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே வர.. சிஎஸ்கே தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 176-6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கடுமையான விமர்சனம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மீது கடுமையான விமர்சனங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வைத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அணி பற்றி.. ஆட்டம் பற்றி சீரியஸாக நினைப்பது இல்லை. அவர் வெறும் 50 ரன்களில் தோல்வி அடைந்தோம் என்று கடந்த ஆட்டத்தில் கூறினார். அதுவே அவரின் மனநிலையை காட்டுகிறது. அவர் ஒரு ஆட்டத்திற்கு பின் பேசும் பேச்சுக்கள் சரியாக இல்லை.

அவர் சகிக்க முடியாத அளவிற்கு பேசுகிறார். அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கிறார். சிஎஸ்கே மேனேஜ்மேண்ட் செய்யும் தவறுகளை.. தான் செய்யும் தவறுகளை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.

Take a Poll

அவர் கடுமையான பிரஷரில் இருக்கிறார். அவரால் அவரின் மனதில் நினைக்கும் விஷயங்களை பேச முடியவில்லை. முக்கியமாக தோனி தொடர்பான விவகாரங்களில் அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தோனி இன்னும் முன்னால் இறங்க வேண்டும். அவரின் ஆர்டரை மாற்ற வேண்டும். ஆனால் ருத்துராஜால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை.

உலகத்திற்கே தெரியும் தோனி பார்மில் இல்லை என்று. ருத்துராஜூக்கும் தெரியும். ஆனால் ருத்துராஜால் முடிவு எடுக்க முடியாது. அவரால் அணியில் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+