Pathirana: பதிரானா எங்கடா.. சிஎஸ்கே அணியில் இருந்து தூக்கிய ருதுராஜ் கெய்க்வாட்.. காரணமே இதுதான்!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக கூட சிறப்பாக பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாததற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
18வது ஐபிஎல் தொடருக்கான 3வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்பின் 4 வெளிநாட்டு வீரர்கள் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ் கெய்க்வாட், நேதன் எல்லீஸ், ரச்சின் ரவீந்திரா, சாம் கரண் மற்றும் நூர் அஹ்மத் என்று தெரிவித்தார்.

அதில் பதிரானாவின் பெயர் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக பதிரானா செயல்பட்டு வருகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை சிதறடித்து வந்த அவரை சிஎஸ்கே அணி நீக்கியதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பாக கூட பதிரானா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவேற்றி இருந்தது. இதனால் கடைசி நேரத்தில் பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டதா என்று ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர். ஆனால் பதிரானாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பதிரானாவின் பவுலிங் ஆக்ஷன் விவாத பொருளாகவே இருந்து வந்தது. கடந்த ஐபிஎல் தொடருக்கு காயமடைந்த பதிரானா, வேறு வழியின்றி பவுலிங் ஆக்ஷனை மாற்றி இருந்தார். ஆனால் பவுலிங் ஆக்ஷன் மாற்றம் அவருக்கு சிக்கலை உருவாக்கியது. அவரால் பழைய மாதிரி விக்கெட்டுகளையோ, யார்க்கர்களையோ வீச முடியவில்லை.
எஸ்ஏ20 லீக் தொடரில் அவரால் விக்கெட் வீழ்த்த முடியாததால், பெஞ்ச் செய்யப்பட்டார். இதனால் பதிரானா ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய பவுலிங் ஆக்ஷனுக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் பழைய ஆக்ஷனை விடவும் கொஞ்சம் கீழாக கைகள் கொண்டு செல்வதால், பந்தை எறியும் குற்றச்சாட்டுக்கு பதிரானா ஆளாக நேரிடும்.
இதனால் பதிரானா பவுலிங் ஆக்ஷன் மற்றும் துல்லியமாக பவுலிங் செய்யும் வரை, சிஎஸ்கே பிளேயிங் லெவனுக்கு திரும்ப வாய்ப்பு கிடையாது என்று பார்க்கப்படுகிறது. அதெபோல் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை கைவிடாமல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தோனியின் செல்லப்பிள்ளையான பதிரானா இந்த சீசனின் 2ஆம் பாதியில் விளையாட வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications