Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பை.. மிட்செல் மார்ஷ் செயலால் கடுப்பான ஷமி.. என்ன சொன்னாருனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை தோற்கடித்து வெற்றிபெற்றது. ஆனால் ஆஸி வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்தவாறு அமர்ந்திருக்கும் புகைப்படம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதற்கு முகமது ஷமி வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அரையிறுதி வரை போட்டியாளர்களை அடித்து நொறுக்கி வந்த இந்தியாவுக்கு இந்த ஃபைனல் நிச்சயமாக சவாலாக இருக்கும் என்பது தெரியும். காரணம் ஃபைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியா அரக்கனாக மாறிவிடும். பிசிசிஐ உலக கோப்பையை அதிக அளவு வென்றது ஆஸி.தான்.

Mohammed Shami on Mitchell Marshs Footstep on World Cup

அதேநேரம் ஃபைனலில் வந்து கப்பை அடிக்க முடியாமல் இரண்டாம் இடத்திற்கு வந்த அணியும் ஆஸி.தான். சொல்லப்போனால் உலக கோப்பை போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 1975ம் ஆண்டிலேயே ஆஸி. கப்பை அடித்திருக்கும். ஆனால் வெஸ்ட் இன்டீஸ் முந்திக்கொண்டது. ஆஸி. ஃபைனல் வரை சென்று தோற்றது. இப்படி இருக்கையில் கடந்த 2003ம் ஆண்டு ஆஸி.யும் இந்தியாவும் கப்புக்காக கடுமையாக மோதின. இதிலும் ஆஸி. வென்றுவிட்டது.

அப்போதிலிருந்து இரு அணிகளும் ஃபைனலில் சந்தித்ததில்லை. ஆனால் இந்த முறை சந்தித்துக்கொண்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸி. எப்படி நம்மை தோற்கடித்ததோ அதேபோல அந்த அணியை தோற்றகடிக்க வேண்டும் என இந்தியா மிகுந்த முனைப்போடு இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் நடந்த சில தவறுகள் ஆஸி.க்கு வாய்பை ஏற்படுத்த, அதை பயன்படுத்தி அந்த அணி கோப்பையை தட்டி சென்றது.

இப்படி இருக்கையில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்தவாறு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. பலரும் மார்ஷ்க்கு கண்டனம் தெரிவித்தனர். சோஷியல் மீடியா முழுவதும் பெரும் விவாதமாக இது வெடித்தது. ஒரு சாரார் மார்ஷ்க்கு எதிராகவும், மற்றொரு பிரிவினர் மார்ஷ்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

Mohammed Shami on Mitchell Marshs Footstep on World Cup

இந்நிலையில் இந்திய அணியின் வீரர் முகமது ஷமி மார்ஷ்ஷின் செயலுக்கு வேதனை தெரிவித்திருக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் காயமடைந்திருக்கிறேன். உலகில் உள்ள அனைத்து அணிகளும் இந்த கோப்பைக்காகத்தான் போராடுகின்றன. உங்கள் தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பை மேல் காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை" என்று கூறியுள்ளார்.

அதுபோல இந்த போட்டியில் விளையாட தான் எந்த அளவுக்கு விருப்பப்பட்டேன் என்பது குறித்தும் ஷமி பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். உலகக்கோப்பை போட்டியில் முதல் சில ஆட்டங்களில் ஷமி விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியபோதுதான் ஷமி உள்ளே வந்தார். இது குறித்து கூறுகையில், "நான்கு போட்டிகளில் விளையாடாமல் வெளியில் இருக்கும்போது உங்களுக்கு மன அழுத்தமாக இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்த்ததை போல அணி சிறப்பாக விளையாடும் போது அந்த அழுத்தம் காணாமல் போய்விடும்" என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே மிட்செல் மார்ஷ் குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஷமியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+