தலைவா... டோணி பிறந்த நாளை திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள் #HappyBirthdayMSD

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் அட்டகாசமான கேப்டன்களில் ஒருவராக புகழ் பெற்ற டோணி இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை ரசிகர்கள் கிட்டத்தட்ட திருவிழா போல அமர்க்களமாக்கிக் கொண்டுள்ளனர்.

டிவிட்டரிலும், பிற சமூக வலைதளங்களிலும் டோணி மயமாகக் காணப்படுகிறது. இந்தியாவின் எந்த ஒரு அணிக்கும் தற்போது கேப்டனாக இல்லை. கடந்த ஐபிஎல் தொடரிலும் கூட அவர் கேப்டனாகப் பணியாற்றவில்லை. ஆனால் ஒரு கேப்டனுக்கு இருக்கும் செல்வாக்கை விட பல மடங்கு அதிக செல்வாக்குடன் வலம் வருகிறார் டோணி.

இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவர் டோணி. ஐசிசியின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே. டோணியின் சாதனைப் புத்தக்கம் பல பக்கங்களைக் கொண்டது.

சென்னையின் சூப்பர் கிங்!

சென்னையின் சூப்பர் கிங்!

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பல சாதனை படைத்தவர் டோணி. இவரது தலைமையில் 2 முறை கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

பிளே ஆப் சுற்று

பிளே ஆப் சுற்று

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும்தான் ஐபிஎல்லில் தான் கலந்து கொண்ட அனைத்துத் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றைத் தவற விடாத ஒரே அணியாகும். காரணம், டோணியின் வழிநடத்தல்.

Mahendra Singh Dhoni to Turn 36 on july 7!-Oneindia Tamil

ரசிகர்கள் கொண்டாட்டம்

டோணியின் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். திருவிழா மயமாகக் காணப்படுகின்றன சமூக வலைதளங்கள்.

ஹேப்பி பர்த்டே கேப்டன் கூல்

இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ள பிறந்த நாள் வாழ்த்து

ரெடியா!

டோணியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அழைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Veteran India cricketer and former captain Mahendra Singh Dhoni turned 36-years-old and fans took to Twitter to wish one of the most popular sportsperson in India.
Please Wait while comments are loading...