Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா புகழும்.. ஜித்தேஷ் சர்மாவை வாங்க அடம்பிடித்த டிகே.. ஆர்சிபி கேப்டன்சி கிடைத்ததும் அப்படிதான்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் ஜித்தேஷ் சர்மா இருந்தாலும், பின்னணியில் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ஆர்சிபி அணியால் குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு முன்னேற முடியும். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது.

RCB vs LSG Why Dinesh Karthik is the reason behind RCB team Qualified for the Playoffs in the IPL 2025

ஜித்தேஷ் சர்மா ஆட்டம்

பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்து வென்றுள்ளது. ஆர்சிபி வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸிங் செய்து வென்றது இந்தப் போட்டியில்தான். விராட் கோலி ஆட்டமிழந்த பின் ஆட்டம் லக்னோ அணியின் கைகளில் சென்றதாக பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா புயலை போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறந்த இன்னிங்ஸ்

33 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 85 ரன்களை விளாசி தள்ளினார். ஜித்தேஷ் சர்மாவின் ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான். இதன் மூலமாக ஆர்சிபி அணியின் நம்பிக்கை உச்சத்திற்கு சென்றுள்ளது. 17 ஆண்டுகளாக மிஸ்ஸான கோப்பை, 18வது ஆண்டில் நிச்சயம் கிடைக்கும் என்று அந்த அணியின் வீரர்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

அடம்பிடித்த தினேஷ் கார்த்திக்

இதற்கு ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் தொடக்கம் முதலே ஜித்தேஷ் சர்மா கட்டாயம் ஆர்சிபி அணியில் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். மெகா ஏலம் முடிவடைந்த பின், ஜித்தேஷ் சர்மாவுடன் அதிக நேரம் செலவிட்டு, அவரின் ஆட்டத்தை மாற்றி இருக்கிறார்.

கேப்டன்சியும் அப்படிதான்

இன்னும் சொல்லப் போனால் நேற்றைய ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மா ஆடிய பெரும்பாலான ஷாட்கள், தினேஷ் கார்த்திக்கின் ஷாட்களை போல் அமைந்திருந்தது. அதேபோல் ரஜத் பட்டிதார் காயம் காரணமாக ஓய்வில் இருக்க வேண்டிய தேவை வந்த போது, அனைவரும் புவனேஷ்வர் குமார் தான் கேப்டனாக இருப்பார் என்று நினைத்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக் ஜித்தேஷ் சர்மா முன்னிறுத்தினார்.

மயங்க் அகர்வாலின் வரவு

இன்னும் சொல்லப் போனால் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட போதே, ஜித்தேஷ் சர்மா ஆர்சிபி அணிக்கு தலைமை தாங்கப் போகும் செய்தியை கூறி இருந்தார். அதேபோல் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக விலகிய போது மாற்று வீரராக மயங்க் அகர்வாலை கொண்டு வந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை அளித்திருக்கிறது.

எல்லா புகழும்

குறிப்பாக விராட் கோலி இல்லையென்றாலும், ஆர்சிபி அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. விராட் கோலியை மட்டுமே நம்பி ஆர்சிபி அணி இல்லை என்ற சூழலை ஒரேயொரு சீசனிலேயே தினேஷ் கார்த்திக் உருவாக்கி இருக்கிறார். இதனால் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு சென்றால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+