பார்.. ஒரே நாடு மூன்றாக பிரிந்து மோதுவதை பார்.. இது சாம்பியன்ஸ் டிராபி கலாட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஒற்றுமையை பார்த்தீர்களா? கவனிக்காவிட்டால் மீண்டும் கண்ணை கசக்கி மூளையை பிழிந்து யோசித்து பாருங்கள்.

இந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் அத்தனையிலும் ஒரு ஒற்றுமை இருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் ஆட்டத்திலேயே போட்டியை விட்டு வெளியேறி நடையை கட்டிவிட்டன.

ஆதிக்கம்

ஆதிக்கம்

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகியவைதான். இதில் மூன்று அணிகள் ஆசிய அணிகள். இங்கிலாந்து மண்ணில் ஆசிய அணிகள் இப்படி ஆதிக்கம் செலுத்தியது முதல் சாதனை.

ஸ்பின்னர்கள் பாடு

ஸ்பின்னர்கள் பாடு

நம்மூர் போல அங்கு பந்து சுழல்வதில்லை. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் பாடு பெரும்பாடு. ஆசிய அணிகள் பெரிதும் நம்புவதோ சுழற்பந்து வீச்சாளர்களைதான். ஆனால் அங்கு போனால் அது எடுபடாது.

பேட்டிங் செம

பேட்டிங் செம

அதேபோல நம்மவர்கள் ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக பேட் செய்வார்கள். ஆனால் இங்கிலாந்து பிட்சுகளில் வேகப்பந்து எடுபடும் என்பதால் பெரும் திண்டாட்டமாகிவிடும். ஆனால் இது பழைய கதை. இம்முறை ஆசிய அணிகள் பட்டையை கிளப்பிவருகின்றன.

ஒற்றுமை

ஒற்றுமை

இப்போது விஷயத்துக்கு வருவோம். அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகளிலும் பாரம்பரிய ஒரு ஒற்றுமை உள்ளது. இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நகைச்சுவையாக ஒரு விஷயம் ரவுண்ட் வருகிறது.

தாய் நாடு இந்தியா

தாய் நாடு இந்தியா

ஒரே நாட்டிலிருந்து பிரிந்த 3 நாடுகள் இந்த தொடரின் அரையிறுதியில் ஆடுகின்றன. அந்த நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்த நாடும் அரையிறுதியில் ஆடுகிறது. இதுதான் அந்த ஃபேமஸ் டயலாக்.

இரு நாடுகள் உருவாக்கம்

இரு நாடுகள் உருவாக்கம்

இங்கிலாந்துதான் இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் அளித்தது. அப்போது பாகிஸ்தான் என்ற நாடும் உருவாக்கப்பட்டது. அப்போது இப்போதைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானோடு இருந்தது. ஆனால், இந்திய பிரதமராக இந்திராகாந்தி பதவி வகித்த காலத்தில், வங்கதேசம் தனிநாடாக மாற உறுதுணை புரிந்தார். இப்போது புரிகிறதா ஏன் இப்படி மெசேஜ் சுற்றுகிறது என்று.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This Champions trophy semi final is special for different reason, which is going viral in social media.
Please Wait while comments are loading...