உயிரை பிடித்துக்கொண்டு சென்ற வீரர்கள்.. ஐபிஎல் சஸ்பெண்ட் ஆனதற்கு பின் இப்படி ஒரு காரணமா? கதறிய ஆஸி?
சென்னை: 2025 ஐபிஎல் சீசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த சீசன் மொத்தமாக காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. ஐபிஎல் சஸ்பெண்ட் ஆனதற்கு பின் சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
இதன் அர்த்தம் இந்த சீசன் நடக்கும். ஆனால் எப்போது நடக்கும் என்று தெரியாது. அதோடு இந்த சீசன் மொத்தமாக காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதால்.. வீரர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன.
1. பொதுவாக இப்படி காலவரையின்றி ரத்து செய்யப்பட்டால் அதன் அர்த்தம் போர் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நிலைமை சரியாக வாய்ப்புகள் இல்லை. இப்போது இருக்கும் நிலைமை இன்னும் மோசமாகும் வாய்ப்புகள் உள்ளன.
2. நிலைமை சரியாகாது. அதன் காரணமாகவே ஐபிஎல் போன்ற பல கோடி முதலீடு செய்யப்படும் தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது.
3. நேற்று தர்மஷாலாவில் நடக்க வேண்டிய பஞ்சாப் டெல்லி மேட்ச் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் வீரர்கள், மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

4. ஸ்மார்ட்டாக யோசித்த பிசிசிஐ தர்மஷாலாவின் மைதானத்தின் லைட்டை அணைத்து.. லைட் வேலை செய்யவில்லை என்று சொல்லி மக்களை வெளியேற்றியது.
5. பாகிஸ்தான் அட்டாக் என்று சொன்னால் மக்கள் பதற்றத்தில் வெளியேறி, கூட்ட நெரிசலில் பலியாகும் வாய்ப்பு உள்ளதால் இப்படி பொய் சொல்லி வெளியேற்றப்பட்டனர்.
6. பின்னர் அங்கிருந்து ரயில், வாகனங்கள் மூலம் வீரர்களும் வேறு மாநிலங்களுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
7. இந்த சம்பவத்திற்கு பின் ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் தங்கள் அணி நிர்வாகத்திடம் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியாவை விட்டு செல்ல வாய்ப்பு உள்ளதா என்று கேட்டு உள்ளனர். இதுவும் கூட இந்த தொடர் சஸ்பெண்ட் ஆக முக்கிய காரணம் ஆகும்.
8. இந்த தொடரை தென்னிந்தியாவில் நடத்த வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் எந்த பகுதி எல்லாம் போரின் போது பாதுகாப்பாக இருக்கும் என்று அடித்து சொல்ல முடியாது.
9. அப்படியே நடத்தினாலும் போர் உச்சம் அடைந்தால் வீரர்கள் வெளியேறுவது கடினம்.
10. அதோடு தென்னிந்தியாவில் மொத்த தொடரை நடத்தினால் அது சில அணிகளுக்கு கிரிக்கெட் ரீதியாக பின்னடைவை தரும். பஞ்சாப் போன்ற அணிகளுக்கு சிக்கலை தரும். இதுவும் கூட இந்த தொடர் சஸ்பெண்ட் ஆக முக்கிய காரணம் ஆகும்.
போர் அபாயம்
இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் மூண்டு உள்ளது. வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
நேற்று இந்த தாக்குதல்களில் இந்திய எல்லைக்குள் அதாவது ஜம்மு மற்றும் பஞ்சாப் உள்ளே நுழைய முயன்ற ஒரு AWACS விமானம் காலி செய்யப்பட்டது. பாகிஸ்தானின் 3 விமானங்கள் நேற்று ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன . இரண்டு F-16 விமானங்கள் மற்றும் ஒரு JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் AWACS விமானம் ஒன்றும் காலி செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications