சிறப்பாக விளையாடி பட்டைய கிளப்புவோம்... விராட் கோஹ்லி நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச சான்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டியில் ஏ பிரிவில் மோதிய நான்கு அணிகளில் இங்கிலாந்தும், வங்கதேசமும் வெற்றி பெற்றது.

அதேபோல் பி பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அரையிறுதி சுற்று நடைபெற்றது. இதில் வங்கதேசத்தை பாகிஸ்தான் தோற்கடித்ததை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று இறுதி போட்டியில் மோதுகின்றன.

 10 ஆண்டுகள் கழித்து...

10 ஆண்டுகள் கழித்து...

கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதால் இந்த ஆட்டமானது உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவல் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

 சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இதற்காக இந்திய ரசிகர்களும் தங்கள் நாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேசுகையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

 குறைத்து மதிப்பிடக் கூடாது

குறைத்து மதிப்பிடக் கூடாது

இதற்கு முன்னர் பாகிஸ்தானை வென்றது குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அதை எதிர்கொண்டு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவர்..அணியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றார் விராட் கோஹ்லி.

 பாகிஸ்தான் வெறி

பாகிஸ்தான் வெறி

லீக் போட்டியில் இந்தியாவை வென்று விட வேண்டும் என்று போராடிய பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே பாகிஸ்தானின் இலக்காகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Captain Virat Kohli says that his team will expose well playing, there is no need to change the team.
Please Wait while comments are loading...