பாஸ்போர்ட் மோசடி: ராஜபக்சே ஆட்சிக் கால அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: பாஸ்போர்ட் மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சாஷினி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் முக்கியமான அமைச்சராக இருந்தவர் விமல் வீரவன்ச. இவரது மனைவி சாஷினி பொய்யான தகவல்களைக் கொண்டு பாஸ்போர்ட் பெற்றார் என்பது புகார்.

இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்படுவோம் என்று பயந்த சாஷினி தலைமறைவானார். அவரை இலங்கை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

சாஷினியைக் கைது செய்வதற்காக கொழும்பு, கம்பொல மற்றும் கண்டியில் ஏழு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனை ஒன்றில் தலைமறைவாக இருந்த சாஷினி இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications