இலங்கை தேர்தல்...நள்ளிரவு நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை
கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக முடிவடைந்ததையடுத்து, தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு- 5,932 வாக்குகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்- 1,290 வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- 708 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

இதே போன்று வடக்கு மாகாண பகுதிகளான யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில், தபால் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 29,565 வாக்குகளும், ஐக்கிய தேசிய கட்சி -21,187 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி- 4,711 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளன.
ஹம்பன் தோட்டா மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அக்கட்சி ஐக்கிய - 8,441 வாக்குகளும், ஐக்கிய தேசிய கட்சி -5,955 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி- 2,401 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளன.
காலே மாவட்ட தபால் வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி -33,798 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 19,613 வாக்குகளும்,, மக்கள் விடுதலை முன்னணி- 4,777 வாக்குகளும் பெற்றுள்ளன.
திரிகோணமலை மாவட்ட தபால் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி -5,215 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 2,894 வாக்குகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பு- 2,099 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி- 301 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளன.
சிங்களர்கள் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி தபால் வாக்குகளில் முன்னணியில் உள்ளது. 2 வது இடத்தில் ராஜபக்சே போட்டியிடும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி உள்ளது.
இன்றுகாலை வாக்கு எண்ணிக்கையின் முழு நிலவரம் வெளியிடப்பட்டு வெற்றி பெறுவது யார் என அறிவிப்பு வெளியாகும்.












Click it and Unblock the Notifications