இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம்: மகிந்த ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு மகிந்த ராஜபக்சே அளித்த பேட்டியில், வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது.
பிரிவினைவாத நோக்கத்தை கொண்டதாகவே கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை உள்ளது. அந்த பிரிவினைவாதத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த பிரிவினைவாத கொள்கைக்கு எந்த நாடும் ஆதரவு கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இலங்கை பிளவுபடுவதை குறிப்பாக இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கையில் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க மாட்டோம். இலங்கை மண்ணில் அதற்கு இடம் கிடையாது.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பிரச்சனை வேறு. ஆனால் எங்களுக்கு இரு நாடுகளுமே நட்பு நாடுகள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications