தீவிரவாதிகளின் மையமாக மாறி வருகிறது இலங்கை: சொல்கிறார் அமைச்சர் சம்பிக ரணவக
கொழும்பு: தமிழகத்தில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும், இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கும் தொடர்பிருப்பதாக இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி: மலேசியா, இந்தோனேசியா,, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் இயங்கிவரும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, தாலிபான் காஷ்மீர் உள்ளிட்டவற்றின் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அதோடு, தமிழகத்தில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும், இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. சமீபத்தில் ஜாகீர் உசைன் என்ற இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர் சென்னையில் கைது செய்யப்பட்டதும் இதன் தொடர்ச்சிதான்.
சென்னையில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இந்த தொடர்புகள் காரணமாக இருக்கலாம். பாகிஸ்தானில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் அகதிகள் என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இன்று மாலத்தீவு குடிமக்களுக்கும் இங்கு வந்துள்ளனர். இதன் பின்னணி என்ன இவ்வாறு அகதிகளாகி வருபவர் யாரென்பது குறித்து இலங்கை உளவுப்பிரிவு தகவல் சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications