தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக இலங்கை நெஞ்சை நிமிர்த்த சீனா காரணமா?
கொழும்பு: இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இலங்கை துடிப்பதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது.
சீனா சமீப காலமாக இலங்கையில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சீன நிறுவனங்கள் முதலீடுகளை கொட்டியுள்ளன. அந்த நாட்டு ரயில்வே துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து கொடுக்கிறது. 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின் நிலையங்களை இலங்கையில் சீனா அமைத்துக் கொடுக்கிறது. நெடுஞ்சாலைகளையும் சீனாவே மேம்படுத்தி வருகிறது.

இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது சீனா. இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக சீனா மாறியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் சீனாவின் இந்திய எதிர்ப்பு நிலைக்கு இலங்கை வெகுவாக துணைபோக தொடங்கியுள்ளது.
இதன்காரணமாகவே, மீனவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி, பொய் ஆவணங்களை உருவாக்கி நீதிமன்றத்தை நம்ப வைத்து ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது சீனா.
மீனவர்கள் படகில் பதிவான ஜிபிஎஸ் பதிவுகளை வைத்து பார்க்கும்போது, போதை கடத்தல் நடந்த பகுதிக்கு அவர்கள் படகு செல்லவேயில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே நீதிமன்றத்திற்கு இலங்கை போலி ஆவணங்களை அளித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, கொழும்பு துறை முகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த வசதி செய்துகொடுத்துள்ளது இலங்கை. அதே நேரம் இந்தியாவும் தனது காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது. சீனாவுக்கு எதிரியான வியட்நாமுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற நிலையில், இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் வருகை தந்தார்.
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க இலங்கையை சீனா பயன்படுத்துவதற்கு பதிலடியாக சீனாவுக்கு பூச்சி காண்பிக்க, வியட்நாமை இந்தியா பயன்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications