இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்திக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திக்க உள்ளனர்.
ஈழத் தமிழர்களின் அமோக ஆதரவு வாக்குகளால் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேனவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று முதன் முதலாக சந்திக்கின்றனர்.

புதிய அதிபர் சிறிசேனன் அழைப்புபை ஏற்று கொழும்பில் இன்று இச்சந்திப்பு நடைபெற்ற உள்ளது. இந்த சந்திப்பின் போது, ஈழ தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் வடக்கு பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்க இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications