ப்ளூ கலரில் மாறிய ஹார்பர்.. கொத்து கொத்தாக திமிங்கலங்கள்.. என்ன நடந்தது?.. மேக்வாரியில் பரபரப்பு..!
: 230 இறந்துபோன திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கின
சிட்னி: ஆஸ்திரேலியாவில் திடீரென 200-க்கும் மேற்பட்ட அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ளது டாஸ்மேனியா என்ற தீவு.. இங்குள்ள மேக்வாரி என்ற துறைமுகத்துக்கு அருகே நேற்றைய தினம் ஏராளமான திமிங்கலங்கள் இறந்துகிடந்தன.
ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை கிளப்பியது..

சிக்கல் பகுதி
ஆனால், அந்த திமிங்கலங்களில் ஏராளமானவை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுகிறார்கள்.. இதையடுத்து, அவைகளை பத்திரமாக மீட்டு மறுபடியும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினர் ஈடுபட முயன்றனர்.. எனினும், இந்த திமிங்கலங்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ள இடமானது மிகவும் சிக்கலான பகுதி என்கிறார்கள்.. அதனால், மீட்பு குழுக்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை.. இதனிடையே கடற்படையினருக்கு உதவியாக, தன்னார்வலர்களும் இறங்கி உள்ளனர்..

டாஸ்மேனியா
இவர்களை பார்த்ததும் உள்ளூர் மக்களும், உதவ முன்வந்தனர்.. அந்தவகையில், கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், பக்கெட்டுகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இப்படி திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றுதான்.. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே டாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்தன..

திமிங்கலங்கள்
300க்கும் மேற்பட்டவை உயிரிழந்தன.. இத்தனைக்கும் பொதுமக்களின் துணையுடன் துரிதமாகவே மீட்புப்பணிகள் நடந்தும். திமிங்கலங்களை காப்பாற்ற முடியாமல் போனது... ஆனால், இந்த முறை பாதிக்கு பாதி திமிங்கலங்கள் உயிருடன் பிடிபடலாம் என நம்பப்படுகிறது. இப்படி கரைஒதுங்கியுள்ள திமிங்கலங்கள் பைலட் வகையை சேர்ந்ததாம்.. சுமார் 6 மீட்டர் வரையில் வளரக்கூடிய இந்த வகை திமிங்கலங்கள் இவை.. நேற்றைய தினம் மொத்தம் 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... அதில் 35 திமிங்கலங்கள் கடல் அலைகளின் எல்லையை தாண்டி கடற்கரையில் உள்ளனவாம்..

சுறாக்கள்
கடல் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள் திமிங்கல மீட்பு கருவிகளுடன் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.. அதேபோல, இறந்துபோன திமிங்கலங்களை தேடி சுறாக்கள் படையெடுத்து வந்துவிடுமாம்.. அந்த சுறாக்களை தடுப்பது அவ்வளவு எளிது கிடையாது என்கிறார்கள் அதிகாரிகள்... அநேகமாக உணவை தேடி இந்த திமிங்கலங்கள் கரைக்கு வந்திருக்கலாம் என்றும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இருந்தாலும் இப்படி கரை ஒதுங்கும் நிகழ்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபடியும் நடந்திருப்பதால், அந்த பகுதி மக்களை இது சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications