ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில்.. அதுவும் பிரார்த்தனை அறையில் எம்பிகள் கசமுச.. லீக்கான வீடியோ பரபரப்பு
சிட்னி: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள வழிபாட்டு அறையில் ஆளும்கட்சி எம்பிகள் உடலுறவில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஆஸ்திரேய அரசு அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடத்திலேயே வைத்து அரசு ஊழியர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்நாட்டு அரசின் ஆலோசகர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் உலுக்கியது. நாடாளுமன்றத்திலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் நாட்டில் இருக்கும் பெண்களை அரசு எப்படிப் பாதுகாக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

வெளியான வீடியோ
இது முடிவதற்குள் மற்றொரு புதிய குற்றச்சாட்டு தற்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்பிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்திலேயே உடலுறவு மற்றும் பாலியல் சீண்டல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் சிசிடிவி வீடியோக்களும் வெளியாகியுள்ளது, அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரார்த்தனை அறை
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பணிபுரியும் டாம் என்பவர் இந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அங்கு பணிபுரியும் ஊழியர்களும் எம்பிகளும் நாடாளுமன்றத்தில் உள்ள பிரார்த்தனை செய்யும் அறையில் உடலுறவில் ஈடுபடுவார்கள் என்றும் ஆளும்கட்சி எம்பிகளை மகிழ்விக்க பாலியல் தொழிலாளிகளும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் புதிய குண்டை அவர் தூக்கிப்போட்டார்.

விதிகளை மீறவில்லை
மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்கள் பேஸ்புக் க்ரூப்களில் பகிர்ந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், எம்பிகளும் ஊழியர்களும் சட்டப்படி எந்த விதியையும் மீறவில்லை என்றாலும் தார்மீக விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்தார்.

கண்ணீர்விட்ட பிரதமர்
இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

பெண்கள் பேரணி
கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் வைத்து தாங்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகப் பல பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தற்போது வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் அந்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய "#March4Justice" என்று மிகப் பெரிய பேரணியையும் அவர்கள் நடத்தினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications