நாளை முதல் தமிழக சட்டசபைக்கு 10 நாட்கள் விடுமுறை.. 25-ந் தேதி மீண்டும் கூடுகிறது
நாளை முதல் தமிழக சட்டசபைக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாளை முதல் சட்டசபைக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கடந்த மே மாதம் 29ம் தேதி துவங்கியது. வனத்துறை சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதங்கள் அன்றைய தினம் நடைபெற்றது. இதையடுத்து பள்ளிக்கல்வி, பால்வளம், உயர்கல்வி, கால்நடை, மின்சாரம், மதுவிலக்கு, நகராட்சி, உள்ளாட்சி, மீன், சட்டம், சிறை, நீதி நிர்வாகம், சத்துணவு, மாற்றுத்திறனாளி, தொழில் துறை, சிறு-குறு தொழில், கைத்தறி, கதர் கிராம தொழில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையத்துறை. சுகாதாரத்துறை என துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டன.

இவ்வாறாக 13 நாட்கள் மானியக் கோரிக்கைகள் மீதான மீதான விவாதங்களும் நடைபெற்று வந்தன. தொடர்ந்து துறை மீதான கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் அவற்றிற்கு பதிலளித்தே வந்தனர். அத்துடன் தங்களது துறை ரீதியான புதிய திட்டங்களையும் அறிவித்தனர். இவையல்லாமல் ஜாக்டா ஜியோ பிரச்சனை, எஸ்.வி, சேகர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழகத்தில் தற்போது நிலவவிரும் விவகாரங்கள் குறித்தும் அலசப்பட்டன.
இதில் அவ்வப்போது எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. அதனை தொடர்ந்து வழக்கம்போல் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். பின்னர், வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே சட்டசபைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது,
விடுமுறை முடிந்து மீண்டும் 25-ந் தேதி சட்டசபை கூட உள்ளது. இதில் செய்தி, சுற்றுலாதுறை, வருவாய் துறை, சுற்றுசூழல் துறை, வணிகவரிதுறை, போக்குவரத்துதுறை, ஆதிதிராவிடர் துறை, தமிழ் வளர்ச்சிதுறை, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் ஜூலை 9-ந்தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications