உளுந்தூர்பேட்டை... மின்னல் தாக்கி மாணவி பலி!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே இடி மின்னல் தாக்கி கனகா என்ற 13 வயது மாணவி பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகள் கனகா (வயது 13). இவள் காரியானூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மழவராயனூரில் உள்ள தனது அக்காள் மீனா வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தாள் கனகா.
மாணவி கனகா, தனது அக்காள் மாமியார் அமிர்தத்துடன் அங்குள்ள உள்ள வயல்வெளிக்கு நேற்று மாலை 3.30 மணிக்குச் சென்றாள்.
அப்போது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனைந்தபசி மாணவி கனகா வீட்டுக்குச் செல்ல முயன்றபோது மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தாள்.












Click it and Unblock the Notifications