"சிம்பு" உள்பட 14 டுபாக்கூர் டாக்டர்கள் கைது.. தர்மபுரியில்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 14 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பகுதிகளை அதிகம் கொண்டதும் கல்வி சுகாதார வசதிகளில் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீஸார் நேற்று போலி டாக்டர்கள் குறித்து கிராமப்புறங்களில் உள்ள மருதுவமனைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஹள்ளியில் முறையான மருத்துவ படிப்பின்றி பொதுமக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்த தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாயை சேர்ந்த சிவன் என்பவரை காரிமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
தொப்பூரில் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த முனுச்சாமி, சங்கரன் ஆகியோரை தொப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அதியமான்கோட்டையில் ஜெயராமன், கோட்டப்பட்டியில் சிலம்பரசன், பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியில் வெங்கடேசன், ஏரியூரில் சிவகுரு, சீனிவாசன், பாலக்கோட்டில் சுப்பிரமணியன், கம்பைநல்லுாரில் பிரபு, சரவணன் உள்ளிட்ட 14 பேர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications