கன்னியாகுமரி கடலில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன்பிடி தடை காலத்தில், அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த காலங்களில் கைது செய்துவந்த நிலையில் இப்போது இலங்கை அந்த அனுபவத்தை பெற்றுள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டு மீனவர்கள் சிலர் இரு படகுகளில் கன்னியாகுமரி அருகேயுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை வீரர்கள், அந்த படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு படகுகளிலும் தலா 400 கிலோ அளவுக்கு மீன்கள் இருப்பது தெரியவந்தது. விதிமுறைகளை மீறியதற்காக இரு படகுகளிலுமிருந்த 14 இலங்கை மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அடுத்த கட்ட விசாரணைக்காக, அவர்களை தூத்துக்குடியிலுள்ள தமிழக கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். கடந்த 7ம்தேதி ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்த 31 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications