ஜெட் வேகம்! திருப்பூர் மாவட்டத்தில் 18 பார்களுக்கு அதிரடியாக சீல்.. ஆய்வுக்குப் பிறகு பரபர ஆக்ஷன்!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தனியார் பாரில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை எனக் கூறி அந்த பாரின் உரிமம் 90 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூட உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களில் மாவட்ட மேலாளர் ஆய்வு செய்து வந்தார். இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து திருப்பூர் மாவட்டத்தில் முறையாக அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய மதுக்கூடங்களை கணக்கெடுக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4 சிறப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications