ராணிப்பேட்டையில் மாமியார் உள்பட 3 பேர் படுகொலை.. மனைவியின் கள்ளக்காதல் தான் காரணமா? இளைஞர் கைது
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் உள்பட 3 பேரை ஒரே இரவில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மனைவியின் கள்ளக்காதல் தான் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் புதுக்குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவருக்கும் கீழ்புதுப்பேட்டையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையே தான் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பிரச்சனையும் வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி தனது கணவர் பாலுவை பிரிந்தார். கணவரின் வீட்டில் இருந்து புவனேஸ்வரி கீழ் புதுப்பேட்டையில் உள்ள தாய் பாரதியுடன் வந்து இருந்தார்.
இதற்கிடையே தான் நேற்று புதுக்குடியானூர் கிராமத்தில் இருந்து பாலு தனது மாமியார் பாரதியின் வீட்டுக்கு வந்தார். அப்போது புவனேஸ்வரி ஓட்டம் பிடித்தார். மாமியார் பாரதியிடம், பாலு வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலு கத்தியை எடுத்து மாமியார் பாரதியை வெட்டி கொன்றார்.
அதன்பிறகு அங்கிருந்து பாலு தனது சொந்த ஊரான புதுக்குடியானூருக்கு வந்தார். அங்கு அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகியோரை இரும்பு கம்பியால் அடித்து தாக்கினார். இவர்கள் 2 பேரும் இறந்தனர். இந்த அண்ணாமலை - ராஜேஸ்வரிக்கு மகன் ஒருவர் உள்ளார். அவரது பெயர் விஜய். விஜயும், பாலுவும் உறவினர்கள் தான்.
ஆனால் பாலு தனது மனைவி புவனேஸ்வரியை பிரிந்த பிறகு அவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதாக பாலு சந்தேகப்பட்டார். அதன்மூலம் மனைவி புவனேஸ்வரி கர்ப்பமானதாகவும் அவர் நினைத்துள்ளார்.
இதனால் விஜயை பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தந்தை அண்ணாமலை, தாய் ராஜேஸ்வரி ஆகியோரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வாலாஜாபேட்டை போலீசார் பாலுவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications