திருப்பரங்குன்றத்தில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி.. தூங்கி கொண்டிருந்தபோது உடல் சிதறிய பரிதாபம்
சிலிண்டர் வெடித்து விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video

மதுரை : சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் அடுத்து உள்ளது பாலாஜி நகர் பகுதி. இங்கு வசித்து வருபவர் ராமமூர்த்தி. பிஸ்கர் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தவர். சமீப காலமாக இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிறைய இடத்தில் கடனை வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார் ராமமூர்த்தி.

குடும்ப தகராறு
அதிக கடன் தொல்லை காரணமாக குடிப்பழக்கத்திற்கும் ஆளாகியுள்ளார். குடிப்பழக்கம் குடும்பத்தில் தகராறை ஏற்படுத்தியது. குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே தினமும் பிரச்சனை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கடன், மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் என எல்லா வகையிலும் ஒன்றுசேர்ந்ததால், ராமமூர்த்தி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தற்கொலை முடிவு
அதனால் யாரிடமும் சரிவர பேசாமலும் இருந்து வந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். நேற்றிரவு 2 மணியளவில், தனது மனைவி காஞ்சனா, 6 வயது மகள் அக்ஷயா தூங்கி கொண்டிருந்த அறையில் சிலிண்டரை கொண்டு வந்து வைத்து, அதனை திறந்துவிட்டதுடன் தீயையும் பற்றவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெடித்து சிதறிய உடல்கள்
சிலிண்டர் டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்திலிருந்து மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இந்த இரண்டு சிலிண்டர்கள் வெடித்ததில், தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் மனைவி, காஞ்சாவும் அவர்களது 6 வயது பெண் அட்ஷயாவும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

3 பேர் உயிரிழப்பு
ராமமூர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications