நிர்மலா தேவி விவகாரம் : சரணடைந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்
நிர்மலா தேவி விவகாரத்தில் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் : மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசி, அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், மதுரை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வந்தனர்.
இதில் முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் அளித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அவரிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தேடப்பட்டு வந்த, முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இதனையடுத்து கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி கீதா உத்தரவிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications