எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த 50 எம்.எல்.ஏக்கள் .. தினகரனின் 'ஸ்லீப்பர் செல்களா'??
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் 80 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமே பங்கு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 50 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 80 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனராம்
அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் பற்றி முடிவு செய்யவும், தினகரன் நியமனம் செல்லாது என அதிமுக தலைமை நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கிய தீர்மானங்கள்
ஜெயாடிவி, நமது எம்ஜிஆரை மீட்பது, பொதுக்குழு கூட்டம் கூட்டுவது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக்கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. அதிமுக இணைப்பிற்குப் பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் பங்கேற்கவில்லை. அவர்களைத் தவிர மீதுமுள்ள எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்றிருக்க வேண்டும்.

50 பேர் புறக்கணிப்பா?
ஆனால் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்பது பற்றிய பட்டியல் ஊடகத்தினருக்கு தரவில்லையாம்.

ஸ்லீப்பர் செல்கள்
ஏற்கனவே தங்களின் ஸ்லீப்பர் செல்கள், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருப்பதாக கூறினார் டிடிவி தினகரன். குடியரசுத்தலைவர் சந்திக்க செல்லும் போது 50 எம்எல்ஏக்கள் செல்வோம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறினர்.

80 பேர்தான் எடப்பாடிக்கு ஆதரவா?
இப்போது அது உண்மையாகியுள்ளது. இன்றைய கூட்டத்தில் 80 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்பதால் மொத்தம் 80 எம்எல்ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவா இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications