வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர் சுருண்டு விழுந்து பலி… மதுரையில் பரபரப்பு
மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார்.
மதுரை: மதுரை வங்கியில் ஒன்றில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணமடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு சரியாக ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. இந்த ஒரு மாதமும் மக்கள் படும் துன்பம் சற்றும் குறையவில்லை. ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற சூழலில் ஏடிஎம் மையங்களில் அன்றாடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அதே போன்று வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியே காணப்படுகிறது.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் பணம் எடுப்பதற்காகவும், பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போதும், கூட்ட நெரிசலில் சிக்கியும் இந்தியா முழுவதும் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க காத்திருந்தவர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு அப்பகுதியில் வசிக்கும் 45 வயதான அண்ணாமலை என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இவரும் வரிசையில் நின்றார்.
நீண்ட நேரமாக வரிசையில் நின்றதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் நின்ற இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி முதலுவி செய்ய முயன்ற போது அவர் உயிர் பிரிந்தது தெரிய வந்தது. இதனால் அந்தப் பகுதி மக்களும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
அவர் உயிர் இழந்தது பற்றி விசாரித்த போது, நீண்ட நேரம் வரிசையில் நிற்க நேரிட்டதால் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications