ஓமைகாட், தமிழக பெண்களில் பாதிப்பேருக்கு ரத்தசோகை!
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு ரத்த சோகை இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவு சுகாதார கணக்கெடுப்பின்படி 2013-2014ம் ஆண்டில் தமிழகத்தில் வசிக்கும் பெண்களில் 49.2 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் ஆவர்.
ரத்த சோகை உள்ள பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்த சோகை
1998-1999ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 56.5 சதவீத பெண்களுக்கு ரத்த சோகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது
அந்த சதவீதம் 49.2 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிரடியாக ஒன்றும் குறையவில்லை.

பெண்கள்
மாவட்ட அளவிலான கணக்கெடுப்பின்படி 10 முதல் 19 வயது வரையிலான பெண்களில் 4.46 சதவீதம் பேருக்கும், கர்ப்பிணிகளில் 56 சதவீதம் பேருக்கும், 16 மாதங்கள் முதல் 3 வயது வரை உள்ள பெண் குழந்தைகளில் 60 சதவீதம் பேருக்கும் ரத்த சோகை இருப்பது தெரிய வந்துள்ளது.

குழந்தைகள்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதையே ரத்த சோகை என்கிறோம். ரத்த சோகையால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவதுடன் பெரியவர்களுக்கும்
உடல்நலப் பிரச்சனை ஏற்படும். ரத்த சோகையால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பலியாகின்றனர்.

மரணம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் 1000 பெண்கள் பிரசவத்தின்போது மரணம் அடைகின்றனர். அதில் 200 பேர் ரத்தசோகையால் பலியாகின்றனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

இரும்புச்சத்து
ஆண்களுக்கு தினமும் 17 மில்லிகிராம் இரும்புச்சத்தும், பெண்களுக்கு 21 மில்லிகிராமும், கர்ப்பணிகளுக்கு 35 மில்லிகிராமும், குழந்தைகளுக்கு 9 முதல் 16 மில்லிகிராமும், பதின்வயது சிறுமிகளுக்கு 26 முதல் 28 மில்லிகிராம் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது.

கறி, காய்கறிகள்
ஆட்டுக்கறி, கீரை வகைகள், முட்டை, பருப்பு, பாதாம், எலுமிச்சை, ஆரஞ்சு பழம் ஆகியவை சாப்பிடுவதால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கிறது.

அரசு
ரேஷன் கடைகளில் அரசியை தான் வழங்குகிறார்கள். ஆனால் பருப்பு வகைகளை வழங்கினால் அது மக்களுக்கு நல்லது. மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகம் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆர். ருக்மணி தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications