அயப்பாக்கத்தில் மர்மநபர்கள் கைவரிசை: 85 பவுன் நகை கொள்ளை
அயப்பாக்கத்தில் வீடு புகுந்த மர்ம நபர்கள் 85 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
Recommended Video

சென்னை: திருவள்ளூர் அடுத்த ஆவடி அயப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருவள்ளூரை அடுத்த ஆவடி அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லிங்கராஜ். புத்தக கடை நடத்திவருகிறார்.

அவரது மகன் பணிக்காக வெளிநாடு செல்வதை அடுத்து அவரை வழி அனுப்ப குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு நேற்று இரவு 11 மணிக்கு விமான நிலையம் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 85 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் வீடு திரும்பிய லிங்கராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications