தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100.. வாவ்.. அந்த சப்ஜெக்ட்டில் அதிகமா? சென்டம் லிஸ்ட் முழுமையாக இதோ!
சென்னை : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ் பாடத்தில் 9 பேர், ஆங்கிலத்தில் 13 பேர், கணிதத்தில் 17 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம் பிளஸ் 2வில் தமிழில் 2 பேர் 100 எடுத்தனர். இன்று காலை வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி தமிழில் ஒருவர் கூட் 100க்கு 100 எடுக்காத நிலையில் 11ஆம் வகுப்பில் தமிழில் 9 பேர் செண்ட்டம் அடித்துள்ளனர்.
இந்த கல்வி ஆண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள், முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டது.

3,61,454 மாணவர்களும், 4,15,389 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,76,844 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,06,413 மாணவ- மாணவிகள், அதாவது 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் : 94.36%மாணவர்கள் : 86.99% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் தேர்ச்சி விகிதம் : கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி விகிதம் 0.86% அதிகரித்துள்ளது.
அரசுப்பள்ளிகள் : 84.97%
தனியார் பள்ளிகள் : 93.20%
சென்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை :
தமிழ் - 9
ஆங்கிலம் - 13
இயற்பியல் - 440
வேதியியல் - 107
உயிரியல் - 65
கணிதம் - 17
தாவரவியல் - 2
விலங்கியல் - 34
கணினி அறிவியல் - 940
வணிகவியல் - 214
கணக்குப் பதிவியல் - 995
பொருளியியல் - 40
கணினிப் பயன்பாடுகள் - 598
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 132

தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்
திருப்பூர் - 96.38%
ஈரோடு - 96.18%
கோவை - 95.73%
நாமக்கல் - 95.60%
தூத்துக்குடி - 95.43%
தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை ( 82.58 %)
மயிலாடுதுறை (83.70 % )
திருவண்ணாமலை (84.00 %)
விழுப்புரம் (84.51 % )
நாகப்பட்டிணம் (85.03 % )
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications