காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் ஒகேனக்கல் வந்தது.. அருவிகளில் வெள்ளப் பெருக்கு!
ஒகேனக்கல்: காவிரியில் கர்நாடகம் திறந்துவிட்ட 9700 கனஅடி நீர் நேற்று ஒகேனக்கல் வந்தடைந்தது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.

இந்த உத்தரவை முதல் செயல்படுத்த மறுத்த கர்நாடகம், பின்னர் வேறு வழியின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,300 கனஅடி வந்து கொண்டு இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 700 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீர்ப் பெருக்கெடுத்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications