கடன் தொல்லை.. தாராபுரத்தில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை.. தாய், குழந்தைகள் பலி

தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    8 வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயில்களில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது- வீடியோ

    தாராபுரம்: தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவத்தில் அவருடைய தாய், குழந்தைகள் என நான்குபேர் பலியாகி உள்ளனர்.

    தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரே பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயியான முத்துசாமி தாய் மயிலாத்தாள், குழந்தைகள் ராஜலட்சுமி, சத்தியமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விவாயியான முத்துசாமிக்கு விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    A Farmer commits suicide with family for debt troublesome near Dharapuram

    இதனால், முத்துசாமி விவசாயத்துக்கு வாங்கிய கடன் அதிகரித்துள்ளது.விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயத்துக்காக வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால் பல நாட்களாக கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், விவசாயி முத்துசாமி இன்று அவருடைய வீட்டில் தாய் மயிலாத்தாள், மகள் ராஜலட்சுமி, மகன் சத்தியமூர்த்தி என 4 பேரும் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்.

    விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் கொடுத்தவர்களின் விவரம் குறித்து குண்டடம் காவல் நிலைய போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+