பூஜைக்கு பூ பறித்துக் கொண்டிருந்த ஹரிணி.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. கோலத்தை பார்த்து கதறிய பெற்றோர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேனிய தெருவை சேர்ந்த செல்வமுத்து அந்த பகுதியில் பல் பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 21 வயதில் ஹரிணி என்ற மகள் இருந்தார்.. அண்மையில் தான் பட்டப்படிப்பு முடித்திருந்தார். ஹரிணி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
செவ்வாய்கிழமை விஜயதசமியை முன்னிட்டு மாலை பூஜைக்காக ஹரிணி தங்களது வீட்டின் 2-வது மாடிக்கு சென்று பூ பறித்துக்கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கால் தவறி அவர் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ஹாிணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்..
இதனிடையே மகளின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்னவாசல் சேனிய தெருவிற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிரிழந்து கிடந்த ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.. விஜயதசமி அன்று பூஜைக்கு பூ பறிக்க சென்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மன்னார்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications