சென்னையில் வேலைக்காரப் பெண் கொடூர கொலை.. முதலாளியம்மாவின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீஸ்!
சென்னையில் வேலைக்காரப் பெண் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: அடையாறில் வேலைக்காரப் பெண் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இவர்களுக்கு சென்னை அடையாறில் சொந்த வீடு உள்ளது. இவர்களது வீட்டில் ஆந்திர மாநில ராஜமுந்திரையை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

முருகானந்தம் குடும்பம்
அண்மையில் முருகானந்தம் தனது மனைவி மகன் மற்றும் மச்சினிச்சியின் மகள் மித்ராசினி ஆகியோருடன் சென்னை வீட்டிற்கு வந்தார். குடும்பத்தினரை வீட்டில் விட்டு வேலை விஷயமாக வெளியில் சென்றார் முருகானந்தம்.

பதறிய முருகானந்தம்
அப்போது அவருக்கு போன் செய்த மனைவி சுஷ்மிதா, வேலைக்கார பெண் மகாலட்சுமி இறந்து விட்டார் உடனே வீட்டுக்கு வாருங்கள் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முருகானந்தம் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

உடலில் காயங்கள்
பின்னர் மகாலட்சுமி இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் முருகானந்தம். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மகாலட்சுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகித்தனர் .

போலீஸ் விசாரணை
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கார பெண் மகாலட்சுமியின் மரணம் தொடர்பாக , சம்பவத்தின் போது வீட்டில் இருந்த அரவது மனைவி மற்றும் மச்சினிச்சியின் மகள் மித்ராசினியிடம் விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்
ஆனால் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். அப்போதுதான் பிரதே பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சித்ரவதை செய்து கொலை
மகாலட்சுமி உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதால் அவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முருகானந்தத்தின் குடும்பத்தாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் போலீசார்.

அதிர வைத்த வாக்குமூலம்
அதில் அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்தது. அதாவது, முருகானந்ததின் மனைவி சுஷ்மிதா ஆசையாக வளர்த்த இரண்டு நாய்களை மகாலட்சுமி அடித்துக்கொன்று விட்டதாக தெரிகிறது.

வெந்நீரை ஊற்றி..
அந்த ஆத்திரத்தில் வேலைக்கார பெண் மகாலட்சுமி மீது வெந்நீரை ஊற்றி சுஷ்மிதாவும் அவரது தங்கை மகளும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கதறி துடித்த மகாலட்சுமிக்கு வலிப்பு வந்துள்ளது.

மகனுக்கு பாலியல் தொல்லை
பின்னர் சற்று நேரத்தில் மகாலட்சுமி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மகாலட்சுமி திடீர் திடீரென சைக்கோ போல் நடந்து கொள்வார் என்றும் தங்களின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்றும் சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.

வீட்டாரிடம் சண்டை
மேலும் வீட்டில் வேலைகளை செய்யாமல் அவ்வப்போது தன்னிடம் சண்டை போடுவார் என்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த தனது தங்கை மகளிடமும் அவர் சண்டை போட்டார் என்றும் சுஷ்மிதா வாக்குமூலம் அளித்தார்.

இரண்டு பெண்கள் கைது
மகாலட்சுமி இறந்தது தொடர்பாக சுஷ்மிதா, மித்ராசினி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். வேலைக்கார பெண்ணை முதலாளியம்மா கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications