மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: பொதுமக்கள் பீதி
நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உயிரிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அருணாசலம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி காளிஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

காளீஸ்வரி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இந்நிலையில் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலுக்கு ஆட்டோவில் வந்தனர். அப்போது காளிஸ்வரிக்கு காய்ச்சல் அதிகரிக்கவே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சைப்பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தெரிய வரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காய்ச்சல் என்பதை கண்டுபிடித்து அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications