தி.நகர் லாட்ஜில் பிணமாக கிடந்த நெதர்லாந்த் பெண் லிண்டா: உடன் தங்கியிருந்தது யார்? போலீஸ் விசாரணை
Recommended Video

சென்னை: தி நகர் லாட்ஜில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்தவர் லிண்டா. இவர் கடந்த 27-ம் தேதி தி.நகர் வெங்கடேசன் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், தாம் பத்திரிகையாளர் என அறிமுகம் செய்துக்கொண்டு தங்கியுள்ளார்.
நேற்று அவர் அறையை காலி செய்வதாக விடுதி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் அறையை காலி செய்யவில்லை. அறையை திறக்கவும் இல்லை.

மர்ம மரணம்
இதையடுத்து நேற்று இரவு ஊழியர்கள் அவரது அறையை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லிண்டா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ரசாயன பவுடர்
இதுகுறித்து மாம்பலம் போலீசில் விடுதி ஊழியர்கள் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் விசாரித்ததில், அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகில் ரசாயன பவுடர் இருந்துள்ளது.

போலீஸ் சந்தேகம்
அதை உட்கொண்டு இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யார் தங்கியிருந்தது?
நெதர்லாந்து தூதரகம் சென்னையில் இல்லாததால், டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு மாம்பலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை தியாகராயர் நகரில் அவருடன் வேறு யாராவது தங்கியிருந்தார்களா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications