பழனி அருகே வட்டி தராததால் நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்.. வயிற்றில் இருந்த 9 மாத சிசு பலி
பழனி அருகே வட்டி தராததால் கர்ப்பிணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்தது.
Recommended Video

பழனி: பாலசமுத்திரத்தில் வட்டி கொடுக்காத காரணத்திற்காக தாக்கப்பட்டதில் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்ததிரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈஸ்வரி முறையாக வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி வசூலிக்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியதாக தெரிகிறது.

கர்ப்பிணி மீது தாக்குதல்
இதில் ஈஸ்வரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிசு உயிரிழப்பு
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வட்டி தராததால் தாக்கியதாலேயே ஈஸ்வரியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருவுடன் பலியான உஷா
கடந்த வாரம் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா - உஷா என்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்தில் 3 மாத கர்ப்பிணியான உஷா கர்ப்பம் கலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீக்குளித்த இசக்கி முத்து
இதேபோல் கடன் தொல்லையால் கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications