வாரிசு என்பதற்காக ஸ்டாலின் தலைவராகவில்லை... இயக்கத்திற்காக போராடி தலைவரானார்- ஆ.ராசா
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாரிசு என்பதற்காக ஸ்டாலின் தலைவராகவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.

முன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகி ஆ.ராசா கூறுகையில் பிற மாநிலங்களில் வாரிசுகள் என்பதற்காக பலர் பதவிக்கு வந்தனர்.
ஆனால் ஸ்டாலின் அப்படி வரவில்லை. அவர் திராவிட இயக்க தத்துவத்திற்கு போராடி திமுக தலைவராகியுள்ளார் என்றார் ஆ.ராசா.












Click it and Unblock the Notifications